மொத்த 18% இட ஒதுக்கீட்டில் சமமாக, மக்கள் தொகைக்கு ஏற்ப 6% பெற முடியவில்லை என்பது ஒவ்வொரு அருந்ததிய மக்களின் வேதனை. படித்து விட்டு வேலைக்கு முறையிட்டால், அங்கு பள்ளர்களையும், பறையர்களையும் மட்டுமே தேர்வு செய்கிறார்கள். மாறாக, அருந்ததியர்களின் 3% இட ஒதுக்கீட்டால், அருந்ததியர்களுக்கு முழு பலனும் இல்லை என்பது உண்மை, மேலும் இதனை பறையர்களுக்கு சாதகமாக்கி அமைத்துள்ளனர். அருந்ததியர்களுள் பலர், உரிய தகுதி இருந்தும், முதல் வகுப்புக்கு மேல் (பஸ்ட் கிளாஸ்) தேர்வானாலும், அங்கு இரண்டாம் வகுப்பு (செகண்ட் கிளாஸ்) தேர்வான பறையர்கள், பள்ளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். அங்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகளும், பறையர்களும், பள்ளர்கலுமே. (உள் இட ஒதுக்கீட்டில் தகுதியுடைய பெண்கள் இல்லையென்ற காரணத்தினால், அங்கு பறையர்களையும், பள்ளர்களையும் நிரப்புகிறார்கள். அருந்ததியர்களில் ஆண்கள் படிப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது, இதில் பெண்கள் எப்படி? உள்ளிட ஒதுக்கீட்டில் பெண்களுக்கு மட்டுமே என்ற பேதம்-சரியான இடத்தில் ஆப்பு வைத்தது போல் அமைத்துள்ளது) இதனால் அருந்ததியர்களுக்கு சேரவேண்டிய (மக்கள் தொகைக்கு ஏற்ப) 6% உரிமையை பெற்றெடுக்க யார் முன்வந்தாலும் அவர்களுக்கு முழு ஆதரவளிப்போம் என்பது தலையாய கடமை.